தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள் இயக்க நடவடிக்கை

சிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-02-05 19:08 GMT


சிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குல தெய்வ வழிபாடு

சிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் குலதெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும் சிவன் கோவில்களிலும் பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுவதுண்டு.

விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து மாவட்ட மக்கள் வருவது வழக்கம். ஆனால் அங்கிருந்து வருவதற்கு உரிய போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில் தவிக்கும் நிலை ஏற்படும்.

சிறப்பு ெரயில்

எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் வருகிற 18-ந் தேதி சிவராத்திரி நடைபெறுவதை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிவராத்திரி குலதெய்வ வழிபாடு முடிந்த பின்பு அவர்கள் ஊர் திரும்புவதற்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் வருகிற 15-ந் தேதி முதல் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மறு மார்க்கத்திலும் தென் மாவட்டங்களில் இருந்து 19 மற்றும் 20-ந் தேதிகளில் பெரு நகரங்களுக்கு சிறப்பு ெரயில் இயக்கப்பட வேண்டியது அவசியமாகும். 

Tags:    

மேலும் செய்திகள்