பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் முதன்முதலாக தொழிலாளிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை
பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் முதன்முதலாக தொழிலாளிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தலைமை டாக்டர் கூறினார்.
பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் முதன்முதலாக தொழிலாளிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தலைமை டாக்டர் கூறினார்.
அறுவை சிகிச்சை
பாபநாசம் வங்காரம்பேட்டை முஸ்லீம் தெருவில் வசித்து வருபவர் ஹக்கீம் (வயது32). தொழிலாளி. இவருக்கு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் குடல் இறக்கம் நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபர், மயக்கவியல் மருத்துவர் நிர்மல் குமார், செவிலியர்கள் கவுசல்யா, விர்ஜினியா ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்்சை செய்தனர்.
முதன் முதலாக...
இதுகுறித்து பாபநாசம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் குமரவேல் கூறியதாவது, 'பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் முதன்முதலாக தொழிலாளி ஹக்கீம் என்பவருக்கு குடல் இறக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் 5 பேருக்கு குடல் வால்வு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது' என்றார். அப்போது டாக்டர் ராஜசேகர் உடன் இருந்தார்.