லட்சுமி நரசிம்மர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார். வழி நெடுங்கிலும் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயா செய்திருந்தார்.