காதிகிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காதிகிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம், கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் பனை மற்றும் காதிகிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு காதிகிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழச்சாறு, சுக்கு காபி, பனை ஓலைப்பொருட்கள், சுக்கு காபித்தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், கருப்பட்டி, காதி சோப்பு வகைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இயற்கையாக விளையும் பனை மரத்தின் விளைப்பொருட்களை கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக இந்த அங்காடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல்ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

இவ்விழாவில் கதர் கிராம தொழில் வாரியம் உதவி இயக்குனர் ரங்கசாமி, கடலூர் மண்டல பனைப்பொருள் பயிற்சி முதல்வர் கணபதி, கதர் ஆய்வாளர் ஜெயக்குமார் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்