தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் திறப்பு

கருத்தப்பிள்ளையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது.

Update: 2023-02-16 18:45 GMT

கடையம்:

கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் கீழாம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கிளை புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. கீழாம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் தலைவர் வழக்கறிஞர் கிராஸ் ஹிமாக்னேட் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். வங்கியின் செயலாளர் சித்திரை, சி.எஸ்.ஐ. தேவாலய சேகர தலைவர் ரைடர்ஸ் தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்