புங்கனூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
புங்கனூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்டது.
மணிகண்டம் ஒன்றியத்துக்கு உள்பட்டது புங்கனூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு ரூ.17.64 லட்சத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி, மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.