பழனி கோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

மார்கழி மாத பிறப்பையொட்டி, பழனி முருகன் கோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

Update: 2022-12-15 16:57 GMT

பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் மாதமான மார்கழி முழுவதும் பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். இந்த நடைதிறப்பு, பூஜை முறைகள் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி வரை இருக்கும்.

மேலும் ஜனவரி 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறும். இதையொட்டி பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, மின்இழுவை ரெயில் சேவைக்கான நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகாலை 3.30 மணியில் இருந்து இந்த பாதை வழியே பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்