புதிய மின்மாற்றி திறப்பு
ஆய்க்குடியில் புதிய மின்மாற்றியை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே ஆய்க்குடி பேரூராட்சிக்குட்பட்ட அனந்தபுரம் தேசிய நகரில் மக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா இயக்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம், உதவி செயற்பொறியாளர் குத்தாலிங்கம், உதவி பொறியாளர் முகமது உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.