நாங்குநேரி தொகுதியில் ரூ.23 லட்சத்தில் புதிய சாலைகள் திறப்பு

நாங்குநேரி தொகுதியில் ரூ.23 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைகளை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-08 20:06 GMT

இட்டமொழி:

நாங்குநேரி தொகுதி முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்டு சாலை, களக்காடு தெற்கு வட்டாரம், செங்களாகுறிச்சி பஞ்சாயத்து, மாவடிபுதூரில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய பேவர்பிளாக் சாலைகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய சாலைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள் சவுந்தர்ராஜன் (செங்களாகுறிச்சி), எஸ்.ரமேஷ் (மலையடிபுதூர்), எஸ்.ரமேஷ் (காடன்குளம்-திருமலாபுரம்), பங்குத்தந்தை அமல்ராஜ், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், துணைத்தலைவர்கள் சந்திரசேகர், கக்கன், வட்டார தலைவர்கள் அலெக்ஸ், ரவீந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பத்மசிங் செல்வமீரான், கோடன்குளம் ஆனந்தராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்