புதிய கட்டிடங்கள் திறப்பு

வள்ளியூர் யூனியனில் புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டது

Update: 2022-09-26 22:36 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேசன் கடை, அங்கன் வாடி மையம் கட்டிடங்களை யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா திறந்து வைத்தார். வள்ளியூர் யூனியன் செட்டிகுளம் பஞ்சாயத்து புதுமனையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கட்டிடம் மற்றும் இந்திரா நகர் காலனியில் ரூ.10.20 லட்சம் மதிப்பீட்டில் அங்கன் வாடி கட்டிடமும், ஆவரைகுளம் பஞ்சாயத்து அலுவலக தெருவில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை பல் நோக்கு மைய கட்டிடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் தலைமை தாங்கினார். வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். புதிய கட்டிடங்களை வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், வள்ளியூர் யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், யூனியன் கவுன்சிலர்கள் மல்லிகா அருள், பொன்குமார், பஞ்சாயத்து தலைவர்கள் ஆவரைகுளம் அழகு பாஸ்கர், அச்சம்பாடு ஆன்றோ வெண்ணிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்