பொறியியல் பிரிவு அலுவலகம் திறப்பு

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் பொறியியல் பிரிவு அலுவலகம் திறப்பு திறக்கப்பட்டது.

Update: 2022-12-09 17:20 GMT

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவல வளாகத்தில், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய பொறியியல் பிரிவு அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி, அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், உதவி செயற் பொறியாளர் தமிழரசி, ஒன்றிய பொறியாளர் ராஜேஷ், ஒப்பந்ததாரர் சங்கர் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்