ரூ.1 கோடியே 15 லட்சத்தில் சமுதாய கூடம் திறப்பு
ரூ.1 கோடியே 15 லட்சத்தில் சமுதாய கூடம் திறப்பு
தலைஞாயிறை அடுத்த வடுகூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே 15 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடந்தது. விழாவில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத்தலைவர் அவை பாலசுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் தனபாக்கியம் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இதில் பேரூராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேஸ்வரி மதியழகன், சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.