கோவில்பட்டியில் ரூ.4 லட்சத்தில் புதிய சாலை திறப்பு
கோவில்பட்டியில் ரூ.4 லட்சத்தில் புதிய சாலை திறக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் முதல் தெரு வடக்குப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் செலவில் வாறுகால், பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், இனாம் மணியாச்சி பஞ்சாயத்து துணை தலைவர் ரேவதி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, யூனியன் செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து வடக்கு திட்டங்குளம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் சண்முகத்தாய் பெருமாள் தலைமையில் யூனியன் நிதி ரூ.3¼ லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தேவர் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.