பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடக்க விழா

பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடக்க விழா காரைக்குடியில் இன்று நடக்கிறது

Update: 2023-05-26 18:45 GMT

காரைக்குடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காரைக்குடி நகராட்சி பகுதியில் நிறைவு பெற்ற பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடக்க விழா இன்று(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் முன்னிலை வகிக்கிறார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிறைவு பெற்ற பாதாள சாக்கடை திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்