ஆளை விழுங்க காத்திருக்கும் திறந்தவெளி குடிநீர் கிணறுகள்

ஆளை விழுங்க காத்திருக்கும் திறந்தவெளி குடிநீர் கிணறுகள்

Update: 2023-04-30 18:45 GMT

நெகமம்

பொள்ளாச்சி அருகே ஜோத்தம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சிக்கு சொந்தமான 2 கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து, குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 கிணறுகளிலும் சுற்றிலும் தடுப்புச்சுவரோ அல்லது கம்பிவேலியோ ஏதும் இல்லை. அவை தரைமட்ட அளவில் திறந்தவெளி கிணறுகளாகவே காட்சியளிக்கின்றன. தற்போது பள்ளிகளுக்கு ேகாடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள் வீதியெங்கும் விளையாடி திரிகின்றனர். அவர்கள் அந்த கிணறுகளின் அருகிலும் விளையாடுகின்றனர். இது மட்டுமின்றி பெரியவர்களும் அமர்ந்து பேசுவது வாடிக்கையாக உள்ளது. அவர்களை விழுங்கும் வகையில் அந்த கிணறுகள் காட்சியளிக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்