ஊட்டி பிளாசம்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி பிளாசம்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Update: 2023-05-17 00:30 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏ டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் ஊட்டி பிளாசம்ஸ் அணியும், லிட்டில் மாஸ்டர்ஸ் அணியும் மோதியது.

போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிளாசம்ஸ் அணி 35 ஓவர்கள் கொண்ட போட்டியில், 30.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் ஸ்ரீதர் 59 ரன்கள், பிரகாஷ் 29 ரன்கள், அசரப் 21 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தனர். லிட்டில் மாஸ்டர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் அபூபக்கர் சித்திக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய லிட்டில் மாஸ்டர்ஸ் அணி 22.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த அணி வீரர் நிதின் 24 ரன்கள் எடுத்தார். பிளாசம்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் முகமது சனூப் மற்றும் பிரகாஷ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பிளாசம்ஸ் அணி இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது. அந்த போட்டியில் ஊட்டி கென்ட் அணியுடன் மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்