திருப்பூரில் களை கட்டிய ஓணம் பண்டிகை
திருப்பூரில் ஓணம் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். வீடுகள் மற்றும் கோவில்களில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருப்பூரில் ஓணம் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். வீடுகள் மற்றும் கோவில்களில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஓணம் பண்டிகை
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
திருமால் வாமன அவதாரம் பூண்டு மகாபலி மன்னனை அடக்கி, பின்னர் அம்மன்னன் வேண்டிய வரத்தின்படி மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண ஆண்டுதோறும் வரும் தினத்தை ஓணம் பண்டிகையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்
ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலையில் எழுந்து பாரம்பரிய புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில் மகாபலி மன்னரை வரவேற்று தாமரை, செண்டுமல்லி, சம்பங்கி மற்றும் வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ணமலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர்.
மேலும் வீட்டில் விருந்து தயாா் செய்து உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் கேரள பாரம்பாிய உணவுகளை பரிமாற்றம் செய்தனர். பின்பு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கோவில்களில் வழிபாடு
திருப்பூாில் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டனர். இதையடுத்து திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில் மற்றும் ஊத்துக்குளி ரோடு ஸ்ரீகுருவாயூரப்பன் ஆகிய கோவில்களில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவில் வளாகத்தில் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். திருப்பூரின் ஒருசில கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஒணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.