தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் போயுள்ளனர் முதல்-அமைச்சர் என கூறினார் .

Update: 2022-06-23 07:43 GMT

சென்னை,

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று காலை சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் பேசிய அவர் கூறியதாவது ,

இந்த இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை எண்ணி நாமெல்லாம் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டு இருக்கிறோம். பக்கத்தில் இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நான் அந்த பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை. இது நம்முடைய வீட்டு திருமணம். எனவே அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள் தான் நம்மை அழிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். தி.மு.க. அழிந்த வரலாறே கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.

இந்த திருமணத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், தோழமை கட்சி தலைவர்கள் வாழ்த்த வந்திருக்கிறார்கள். அனைவரின் சார்பிலும் நான் மட்டுமே வாழ்த்தினால் போதும் என்று என்னை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவரின் சார்பில் மணமக்களை வாழ்த்த கடமைப்பட்டு இருக்கிறேன்.என கூறினார் .

Tags:    

மேலும் செய்திகள்