பா.ஜனதாவிற்கு 4 சதவீத ஓட்டுமட்டும்தான் - எஸ்.பி.வேலுமணி

கோவை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. - தி.மு.க இடையேதான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Update: 2024-03-23 13:02 GMT

கோவை, 

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கோவை வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், பொள்ளாச்சி வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி, நீலகிரி வேட்பாளர் லோகேஷ் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-

நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறப்போவது நாம்தான். திமுக - அ.தி.மு.கவிற்கு இடையே மட்டும்தான் கோவையில் போட்டி. பா.ஜனதாவின் அண்ணாமலை கரூரில் ஏன் நிற்கவில்லை ? . போட்டி திமுக - அ.தி.மு.கவிற்கு இடையேதான் என்பது விவரமானவர்களுக்கு தெரியும் . 4 சதவீத ஓட்டுமட்டும்தான் பா.ஜனதாவிற்கு இன்றைக்கும் இருக்கின்றது . இந்த 4 சதவீதம் ஓட்டுடன் , 6 சதவீதம் அதிகம் சேர்த்து கொண்டாலும் கூட 10 சதவீதம் பெற்றால் கோவையில் பா.ஜனதா ஜெயித்து விட முடியுமா?. அ.தி.மு.க உலகத்தில் 7 வது பெரிய கட்சி.

34 சதவீதம் வாக்குகள் இருக்கின்ற பெரிய கட்சி அ.தி.மு.க. .அதற்கு பின்புதான் தி.மு.க .இதுதான் தேர்தல் கணக்கு கோவை நாடாளுமன்ற தொகுதியில் யாரும் கவலைப்பட வேண்டியது கிடையாது. நமக்கு சிங்கை ராமசந்திரனின் வெற்றி உறுதி. ஆனால் எதிரியை குறைத்து மதிப்பிட கூடாது . முக்கியமாக தி.மு.க.தான் நமக்கு முதல் எதிரி . இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்