டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கணித புதிர் போட்டி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கணித புதிர் போட்டி திங்கட்கிழமை நடக்கிறது.

Update: 2022-06-17 11:15 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கணித திறனை வெளிப்படுத்தும் விதமாக அன்றாட வாழ்வில் கணிதம் (maths in daily life) என்ற தலைப்பில் இணையவழி புதிர் போட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கு 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் https://bit.ly/3tBXNzr என்ற இணைப்பு மூலம் நாளைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்த மாணவர்களுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) போட்டி நடத்தப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய www.drsacoe.org என்ற கல்லூரி இணையதளத்திலும், 9894469428 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்