ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

கூத்தாநல்லூரில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

Update: 2023-07-18 19:15 GMT

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் போலீசார், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூத்தாநல்லூர் பகுதியில், தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகளை, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து, அதன் எண்களை விற்பனை செய்த, கூத்தாநல்லூர் மேல்கொண்டாழி, தீன் நகரை சேர்ந்த முகமதுமகசூம்(வயது36), பொதக்குடி சதாம் உசேன் தெருவை சேர்ந்த செய்யதுஅன்சாரி(30) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமதுமகசூம், செய்யதுஅன்சாரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்