சின்ன வெங்காயம் விலை உயர்வு
திண்டுக்கல்லில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு ரோடு, பென்சனர் தெரு, பழனி பைபாஸ் பகுதிகளில் வெங்காய தரகுமண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தரகுமண்டிகளுக்கு சுற்றுவட்டார பகுதிகள், திருப்பூர், துறையூரில் இருந்து சின்ன வெங்காயமும், பெங்களூரு மற்றும் வடமாநிலங்களில் இருந்து பல்லாரியும் விற்பனைக்கு வருகிறது. கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.55 வரையில் விற்பனை ஆனது.
இந்தநிலையில் அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.35 முதல் ரூ.64 வரையில் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, சின்ன வெங்காயம் வரத்து தற்போது குறைந்துள்ளது. மேலும் முகூர்த்தம், விசேஷம் போன்ற காரணங்களால் அதன் தேவை அதிகரித்தது. இதனால் விலை உயர்ந்துள்ளது என்றனர். பல்லாரியை பொருத்தவரை கடந்த வாரம் விற்ற அதே விலையனில் கிலோ ரூ.7 முதல் ரூ.12 வரையில் நேற்று விற்பனையானது.