சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரம்

நிலக்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-12-12 14:43 GMT

நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மிளகாய்பட்டி, என்.ஊத்துப்பட்டி, பிள்ளையார்நத்தம், என்.ஆண்டிப்பட்டி, முத்துக்காமன்பட்டி, சீதாபுரம், சின்னமநாயக்கன்கோட்டை, சுக்கலாபுரம், மைக்கேல்பாளையம், பச்சமலையான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அவை விளைந்து அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து நிலக்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடை பணி தொடங்கியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், கணிசமான விலையும் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் மழைப்பொழிவு காரணமாக ஆங்காங்கே அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது வேதனையடைய செய்துள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்