தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால்சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வுஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை

Update: 2023-07-21 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி உழவர் சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.

சின்ன வெங்காயம் சாகுபடி

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை வெயில் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைந்தது. இதனால் அதன் விலை ரூ.150 வரை உயர்ந்தது. கடந்த வாரம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கு மேல் அதிகரித்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ சின்னவெங்காயம் ரூ.110-க்கு விற்பனையானது.

ரூ.120 ஆக உயர்வு

இதனிடையே உழவர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைய தொடங்கியது. இதனால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.10 அதிகரித்தது. இதன் காரணமாக உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து 1 கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் சமையலுக்காக சின்ன வெங்காயத்தை வாங்கும் அளவை பொதுமக்கள் குறைத்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்