முன்விரோத தகராறு ஒருவர் கைது

முன்விரோத தகராறு ஒருவர் கைது

Update: 2023-01-22 18:45 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஏழுமலை(வயது 53). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ராமர் (55) என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று காலை காட்டுசெல்லூர் காலனி ஆலமரம் அருகே நின்று கொண்டிருந்த ஏழுமலை, இவரது உறவினர் சிவா ஆகியோரை ராமரும், அவரது மகன் பார்த்திபன்(30) ஆகியோர் அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் ராமர், பார்த்திபன் ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்