வாகனம் மோதி ஒருவர் சாவு
வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கீழத்தாழனூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). சம்பவத்தன்று இவர் மொபட்டில் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சதீஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.