கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-28 21:46 GMT

முக்கூடல்:

முக்கூடலை சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (31) தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி ராஜா அவரது நண்பர் வீட்டின் மாடியில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் அரிவாளால் வெட்டியதோடு அவருடன் வந்தவர்கள் கையால் ராஜாவை தாக்கி மிரட்டினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 வயது மதிக்கத்தக்க ஒருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்