அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருந்தவர்களில் 6 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது 26 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 101 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது.