அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களில் 2 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 13 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 146 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.