கஞ்சா வழக்கில் மேலும் ஒருவர் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகே கஞ்சா வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-12 19:54 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டானா விலக்கு அருகே நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், இலுப்பையூரணியை சேர்ந்த பார்த்த சாரதி (வயது 23) என்பவரை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீரிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பிரபு (41), மற்றும் அவருடைய தாயான பசுபதி (65) ஆகிய இருவரையும் கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி சரஸ்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் அருள்பாண்டியை (29) நேற்று விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்