கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

ராதாபுரத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-23 19:42 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுடலையாண்டி (வயது 20) மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை விற்பதற்காக கொண்டு சென்றபோது, அவரை ராதாபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். சுடலையாண்டிக்கு கஞ்சாவை விற்பதற்காக வழங்கியதாக பரமேசுவரபுரத்தைச் சேர்ந்த ஆதித்யாவையும் போலீசார் ைகது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பரமேசுவரபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்தை (24) போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்