திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்
நெல்லை அருகே கங்கைகொண்டான் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). அணைதலையூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தளவாய்சாமி (66). இவர்கள் தோட்டத்தில் இருந்த மின்மோட்டார்களை மர்மநபர் திருடி சென்றதாக கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாரியப்பன் (48), முருகன் (46) ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கூர் வேத கோவில் தெருவை சேர்ந்த சந்தியாகு (55) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.