மேலும் ஒருவர் கைது

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யபட்டார்.

Update: 2023-07-21 19:27 GMT

காரியாபட்டி, 

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த மதுபாட்டில்களை அள்ளிச் செல்ல முற்படும்போது அந்த பகுதியில் ரோந்துபணி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கமல் வருவதை பார்த்த அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குணா என்ற குணசேகரன் (வயது 22) உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இ்ந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை பகுதியை சேர்ந்த சிவபாலன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்