ரெயில் மோதி ஒருவர் பலி
கீழக்கடையத்தில் ரெயில் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
கடையம்:
கீழக்கடையம் ரெயில் நிலைய தண்டவாளத்தில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உடல் சிதறி கிடப்பதாக தென்காசி ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அதிகாலையில் பாலக்காட்டில் இருந்து தென்காசி வழியாக நெல்லை செல்லும் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.