போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி

Update: 2023-02-11 19:30 GMT

சேலம் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக அன்புதாசன் (வயது 35) என்பவர் பணியாற்றி வருகிறார். டிரைவரான அவர் நேற்று போலீஸ் வாகனத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் பொருட்களை அங்கு இறக்கி வைத்துவிட்டு மீண்டும் ஆயுதப்படைக்கு வாகனத்தை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

அப்சரா இறக்கம் பகுதியில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வயதுடைய நபர் மீது எதிர்பாராதவிதமாக போலீஸ் வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர் வரும் வழியிலேயே அவர் இறந்தவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்தவரின் சட்டைப்பையில் ஆஸ்பத்திரியில் பொது பிரிவில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றதற்கான சீட்டு இருந்தது. அதில் ரவிக்குமார் (37) என்றும், செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து பலியானவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்