உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி; 6 பேர் காயம்

உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-02-21 20:59 GMT

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ கவிழ்ந்தது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வகுரணி நோக்கி ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது. இந்த ஆட்டோ உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவின் இடிபாடுகளுக்குள் சிக்கி வகுரணியை சேர்ந்த ராமத்தேவர்(வயது 84) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கருக்கட்டான்பட்டியை சேர்ந்த சொக்கர்(65), சின்னப்பாண்டி(64), தங்கவேலு(65), பெருமாள்(62) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சுரேஷ்(42), சந்தைப்பட்டி லலிதா(23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து குறித்து அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமத்தேவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ெதாடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்