கடையம்:
ஆலங்குளம் அருகே உள்ள பரும்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). யாசகம் பெற்று வந்த இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டில் தூங்கிய மணிகண்டன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் இறுதிச்சடங்கு செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணிகண்டன் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மணிகண்டன் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.