ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2023-08-20 20:43 GMT

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் பூங்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் நீலநிற கட்டம் போட்ட கைலி மற்றும் வெள்ளைநிற முழுக்கை சட்டை அணிந்து இருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்