அபய ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
திருவெண்காடு அருகே மங்கை மடம் அபய ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. இதில்ன்திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று 20-ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்தது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலையிலிருந்து மாலை வரை ஒரே நாளில் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. முடிவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.