கே.எம்.ஜி. கல்லூரியில் ஓணம் திருவிழா
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் நுண்கலை மன்றத்தின் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் மு.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் மு.மேகராஜன் வரவேற்றார்.
விழாவில் பல வண்ண அத்திப்பூ கோலங்கள் வரைதல், கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒருங்கிணைப்பாளர் ஜா.ஜெயக்குமார் தொகுத்து வழங்கினார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெ.வளர்மதி நன்றி கூறினார்.