முக்காணியில்மரத்தில் லாரி மோதிடிரைவர் படுகாயம்

முக்காணியில் மரத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-08-09 18:45 GMT

ஆறுமுகநேரி:

கயத்தாறு மேலத்தெருவை சேர்ந்த மன்னர்சாமி மகன் செல்வக்குமார். இவர் வாடகை லாரி டிரைவராக உள்ளார். இவர் நேற்று பகல் 12 மணி அளவில் பழைய காயல் வழியாக ஆறுமுகநேரிக்கு உப்பு லோடு ஏற்றுவதற்காக லாரியை ஓட்டி வந்துள்ளார். முக்காணி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதை பார்த்து சாலையில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறிஓடி உயிர்தப்பினர். சிறிது நேரத்தில் லாரி ரோடு ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன் பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் செல்வகுமார் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்