நெல்லை வந்த ரெயில்களில் கிருமி நாசினி தெளிப்பு

திருப்பத்தூரில் பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக நெல்லை வந்த ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2023-09-09 19:28 GMT

திருப்பத்தூரில் பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக நெல்லை வந்த ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பன்றிக்காய்ச்சல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கடைக்காரர் ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகர பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

கிருமி நாசினி தெளிப்பு

இதையடுத்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பஸ்நிலையம், சினிமா தியேட்டர், ரெயில் நிலையங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சென்ற அனைத்து ரெயில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ரெயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.

ஒரு மாதம்

இதேபோல் சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்த பகுதியிலும், நெல்லை புதிய பஸ்நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், ஐகிரவுண்டு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த பணியானது ஒரு மாதம் தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்