தெற்கு திட்டங்குளத்தில்இமானுவேல் சேகரன்முழு உருவ வெண்கல சிலை திறப்பு
தெற்கு திட்டங்குளத்தில் இமானுவேல் சேகரன் முழு உருவ வெண்கல சிலையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரன் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. ஊர் தலைவர் டி.அசோக்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்தானம் வரவேற்று பேசினார்.
தியாகி இமானுவேல் சேகரன் முழு உருவ வெண்கல சிலையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கா.கருணாநிதி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மகாலட்சுமி கே.சந்திரசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் என்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.