அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் ரோட்டில்மண்குவியலால் போக்குவரத்துக்கு இடையூறு
அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் ரோட்டில் மண்குவியலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்
அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் ரோட்டில் வேம்பத்தி பகுதியில் போக்குவரத்து இடையூறாக மண் கொட்டப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாகனம் எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிடும்போது இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் மண் குவியல் இருப்பது தெரியாமல் அவைகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண்குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.