கம்பத்தில்ஆசிரியர்களுக்கு பயிற்சி

கம்பத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-01-05 18:45 GMT

தேனி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி முகாம் நடந்தது. அதன்படி கம்பம் வட்டார அளவிலும் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற முகாம் நேற்று முன்தினம் முடிந்தது. பயிற்சி முகாமை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நாகஜோதி, கம்பம் வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரத ராணி ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர். இதுகுறித்து பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 3 நாள் பயிற்சியில் வயதை மறந்து ஆசிரியைகள் குழந்தைகளாக மாறி ஆடி, பாடி கற்றல் திறன்களை மேம்படுத்திக் கொண்டனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்