கம்பத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் கருவி

கம்பத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் கருவி வழங்கப்பட்டது

Update: 2022-11-10 18:45 GMT

தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் பயறுவகை சாகுபடியை அதிகப்படுத்தும் பொருட்டு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுகிறது. அதன்படி கம்பம் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு கருவியான விசைத்தெளிப்பான் கருவி ரூ.3 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்டது.

இதற்கு தேனி வேளாண்மை இணை இயக்குனர் செந்தில் குமார் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு விசை தெளிப்பான் கருவியை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, கம்பம் வேளாண்மை விரிவாக்க மையம், மேலக்கூடலூர் அரசு விதைப்பண்ணைகளில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். இதில் வேளாண்மை துணை இயக்குனர் சங்கர், கம்பம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூங்கோதை மற்றும் வேளாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்