கம்பத்தில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

கம்பத்தில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-11-06 18:45 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கடந்த 4 வருடங்ளுக்கு முன்பு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சி பணியாளர்கள் பிடித்து சென்று அந்த நாய்களுக்கு கருத்தடை செய்து வெறிநாய் தடுப்பூசி செலுத்தி பராமரித்து வந்தனர். பின்னர் பிடிபட்ட இடத்திலேயே அவைகளை பத்திரமாக விட்டனர். கருத்தடை செய்வதால் நாய்களின் இனப்பெருக்கம் குறைந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாததால் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த நாய்கள் தெருக்கள் மற்றும் சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால் இருசக்கர வாகனம், கார்களில் செல்வோர் விபத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரட்டி சென்று கடித்து வருகின்றன. கம்பத்தில் கடந்த சில மாதத்தில் 50-க் கும் மேற்பட்டோர் நாய் கடியால் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்