கம்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கம்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-14 17:22 GMT

தேனி மாவட்டம் கூடலூர் மேட்டுக்குளம் மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (வயது 38). இவர், கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை தவறான எண்ணத்தில் பார்த்ததாகவும், பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராஜேஷ் கண்ணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்