கம்பத்தில்1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை
கம்பத்தில் நேற்று 1 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது.
கம்பம் பகுதியில் நேற்று காலையில் இருந்தே வெயில் மக்களை வாட்டி வதைத்தது. பின்னர் பகல் 12 மணி அளவில் வானத்தில் கருமேக கூட்டங்கள் திரண்டன. பின்னர் சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத்தொடர்ந்து பலத்த மழையாக மாறி சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த மழையால் உத்தமபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் கழிவு நீருடன், மழை நீர் கலந்து சென்றது.
மேலும் மாலையம்மாள்புரம், காமயகவுண்டன்பட்டி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் சாலையில் சென்றதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். கடும் வெயிலுக்கு இடையே திடீரென மழை கொட்டி தீர்த்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.