கம்பத்தில்அனுமதியின்றி மரங்களை வெட்டிய 11 பேர் மீது வழக்கு
கம்பத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கம்பம் மேற்குப்பகுதியான கம்பம்மெட்டு அடிவாரப்பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதாக கம்பம் வருவாய் அலுவலர் நாகராஜிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் தெய்வேந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் 6 புளியமரங்கள் மற்றும் 2 இலவம் மரங்கள் வேரோடு தோண்டி எடுக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக கம்பத்தை சேர்ந்த விவசாயிகளான கண்ணன், கேசவன், மணிகண்டன், பாண்டு, சரவணன், முருகன், கருப்பு, பாண்டி, சங்கையா, மாயாண்டி, ராஜா ஆகிய 11 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.